எங்களை பற்றி

முகப்பு > எங்களை பற்றி

பின்னணி

இலங்கையின் வர்த்தக நிதி மற்றும் முதலீட்டு வங்கியியல் துறையில் நிபுணராக மிகச்சிறந்த நிதிசார் வரலாற்றினைக் கொண்ட நாட்டின் முன்னணி நிதிச்சேவை வழங்குநராக இலங்கை மெர்ச்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் திகழ்கின்றது.
MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி வழங்கப்பட்ட நிதிக்கம்பனியாகவும் திகழ்கின்றது.

துரிதமாக வளர்ந்து வரும் குழுவினர், விஸ்தரிக்கப்பட்ட கிளை வலையமைப்புக்கள; மற்றும் உற்பத்தி வரிசைகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட நாட்டின் வளர்ந்து வரும் நிதிச்சேவை வழங்குநர்களில் ஒருவராக நாம் உள்ளோம். நாட்டின் ஸ்திரத்தன்மை வாய்ந்த நிதி நிறுவனம் என்ற வகையில், உங்கள் முழுக் குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதிசார் ஆதரவுடன், உங்கள் நிதிக்கான பாதுகாப்பான முதலீடுகளை நாம் வழங்கி வருகின்றோம்.

MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சியின் முக்கிய தொழிற்பாடுகளாக கடன் கொடுத்தல் மற்றும் வைப்புக்களை பெறல் மற்றும் முதலீட்டு ஏற்பாடு மற்றும் ஆலோசனை தீர்வுகளை வழங்குதல் ஆகியவை காணப்படுகின்றன.

தொலைநோக்கு

தேசத்தின் மிகச்சிறந்த புத்துருவாக்க வர்த்தக தீர்வு வழங்குநராக உருவாகுதல்.

பணி நோக்கு

• தொழில் முயற்சியாண்மையை விருத்தி செய்வதுடன், புத்துருவாக்கம் மற்றும் நிலைபேறான தீர்வுகள் ஊடாக எமது வாடிக்கையாளர்களின் செல்வத்தை அதிகரித்தல்.

• பெருநிறுவன நிர்வாகத்தின் உயர் தரத்தை பேணுவதோடு, பங்குதாரர்களின் பெறுமதியை மேம்படுத்தல்.

• ஊழியர்களின் சேவை செயல்திறனை கௌரவிப்பதுடன், அவர்களின் அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்தல்.

• எமது வர்த்தக பங்காளர்களுடன் பரஸ்பர நன்மையளிக்கக் கூடிய உறவினை வளர்த்தல்.

• பெருநிறுவன சமூக பொறுப்புக்களின் கொள்கைகளை பேணி, தேசத்திற்கு சேவையாற்றுவதன் ஊடாக சமூகம் மீதான எமது பொறுப்புக்களை நிறைவேற்றல்.

நிறுவன மதிப்புக்கள்

எமது முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுக்கும் போது உயர் ஒழுக்கவியல், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை நிலைநிறுத்துதல்.அறிவு மற்றும் ஆய்வுகளுக்கமைய, செயல்திறனை நோக்கிய பாதையை வழிநடத்திச் செல்லல். அக்கறையான, பகிரக்கூடிய மற்றும் இணக்கமான சூழலை உருவாக்குவதன் ஊடாக எமது ஊழியர்கள் மத்தியில் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல்.சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல்.

 • எமது அனைத்து செயற்பாடுகளின் போதும் ஒழுக்கவியல்> நெறிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின்
  அதியுயர் சம்பிரதாயங்களை உறுதி செய்தல்.
 • செயல்திறனை கண்டறிவதில் அறிவு மற்றும் முன்மதி ஆகியவற்றுடன் எமது கோட்பாடுகளை
  வழிநடாத்துதல்.
 • சிறந்த மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துதல்.
 • சேவை செயல்திறன்>; வகைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு உயர்
  சேவையை வழங்குதல்.
 • ஒற்றுமை மற்றும் துணிவுடன் சவால்களுக்கு முகங்கொடுத்தல்.
Guaranteed Deal

Finest financial solutions to suit your budget.

Fast Approvals

Minimum documents & hassle free process.

Superior Service

Superior customer service at your door step.

திரு. தம்மிக்க ஹபுஹின்ன

பிரதம நிறைவேற்று அதிகாரியின் சுய விவரம்

திரு. தம்மிக்க ஹபுஹின்ன குத்தகை மற்றும் வங்கியியல் தொழிற்துறையில் 29 ஆண்டுகளுக்கு மேலான தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ள குத்தகை மற்றும் வங்கியியல் நிபுணராக விளங்குகிறார். இவர் தனது வங்கியியல் தொழிலை செலான் வங்கி பிஎல்சி நிறுவனத்திலிருந்து ஆரம்பித்தார்.

2005 ஆம் ஆண்டு இவர் சவுதி அரேபியாவிலுள்ள முன்னணி விசேட குத்தகை நிறுவனமும், அந்நாட்டின் முதலாவது வங்கியல்லாத நிதி நிறுவனமுமாகிய சவுதி ORIX குத்தகை நிறுவனத்துடன் இணைந்து கொண்டார். சவுதி அரேபிய இராச்சியத்தில் குத்தகை நிதியை ஊக்குவிப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். மேலும் இவர் நேஷன்ஸ் ட்ரஸ்ட் உள்ளக வங்கியியல் கொள்கையின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பான முதுமானி பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் நிறைவேற்று டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவிலுள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் தலைமைத்துவ பதவிகள் பலவற்றை இவர் வகித்துள்ளதுடன், அவர்களின் செயல்பாட்டுத் தலைவராக ஒரு புதிய நிதி நிறுவனத்தை நிறுவுவதற்கான மூல காரணமாகவும் தொழிற்பட்டார்.

வங்கியியல் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கு மேலதிகமாக, இவர் சில்லறை வங்கியியல், கடன் வங்கிச் செயல்பாடுகள், குத்தகை நிதி, நுகர்வோர் நிதி, ரியல் எஸ்டேட் நிதி, குத்தகை நடவடிக்கைகள், பெறத்தக்க நிர்வாகம், உற்பத்தி மேம்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் சிறந்த வெளிப்பாட்டையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பணிப்பாளர்கள் சபை

இலங்கையின் வர்த்தக நிதி மற்றும் முதலீட்டு வங்கியியல் துறையில் நிபுணராக மிகச்சிறந்த நிதிசார் வரலாற்றினைக் கொண்ட நாட்டின் முன்னணி நிதிச்சேவை வழங்குநராக இலங்கை மெர்ச்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் திகழ்கின்றது. MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி வழங்கப்பட்ட நிதிக்கம்பனியாகவும் திகழ்கின்றது. துரிதமாக வளர்ந்து வரும் குழுவினர், விஸ்தரிக்கப்பட்ட கிளை வலையமைப்புக்கள; மற்றும் உற்பத்தி வரிசைகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட நாட்டின் வளர்ந்து வரும் நிதிச்சேவை வழங்குநர்களில் ஒருவராக நாம் உள்ளோம். நாட்டின் ஸ்திரத்தன்மை வாய்ந்த நிதி நிறுவனம் என்ற வகையில், உங்கள் முழுக் குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதிசார் ஆதரவுடன், உங்கள் நிதிக்கான பாதுகாப்பான முதலீடுகளை நாம் வழங்கி வருகின்றோம். MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சியின் முக்கிய தொழிற்பாடுகளாக கடன் கொடுத்தல் மற்றும் வைப்புக்களை பெறல் மற்றும் முதலீட்டு ஏற்பாடு மற்றும் ஆலோசனை தீர்வுகளை வழங்குதல் ஆகியவை காணப்படுகின்றன.

Mr. A M A Perera

Chairman

Independent / Non-Executive Director

Dr. N S Punchihewa

Director

Independent / Non-Executive Director

Mr. M P R Kumara

Director

Non Independent / Non-Executive Director

Mr.G.A.Jayashantha

Director

Non Independent / Non-Executive Director

Mr.Varuna Jayasinghe

Director

Independent/ Non-Executive Director

Mr. R. M. N. Jeewantha

Director

Non Executive/ Non Independent Director

Mr. Priyal Silva

Director

Non-Executive/ Non – Independent Director

Mr. Y A Jayathilaka

Director

Non-Executive/ Non – Independent Director

முக்கிய மைல்கற்கள்

நிறுவனத்தின் பெயர்

இலங்கை மெர்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி

நிறுவனத்தின் பதிவு இலக்கம்

PQ10

சட்ட படிவம்

1938 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக இணைக்கப்பட்டதுடன், 2007 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதியன்று, 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள்பதிவு செய்யப்பட்டு, கொழும்பு பங்குச் சந்தையில் மேற்கோள் காட்டப்பட்டது.

2000 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க நிதிக் குத்தகை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனமாகும்.

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனமாகும்.

பங்குச் சந்தைப் பட்டியலிடல்

25 ஏப்ரல் 1991

பதிவு செய்யப்பட்ட அலுவலகம்

இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,
இல 28, புனித மைக்கேல்ஸ் வீதி,
கொழும்பு 03

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்

124011426

VAT பதிவு இலக்கம்

124011426 7000

மத்திய வங்கி பதிவு இலக்கம்

050

நிதியாண்டு முடிவு

31 டிசம்பர்

இணைப் பங்காளர்

லங்கா செக்யூரிட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட்
இல. 228/1, காலி வீதி, கொழும்பு 04
தொலைபேசி: 011-4706757
தொலைநகல்: 011-4706767
மின்னஞ்சல்: lankasec@sltnet.lk
இணையத்தளம் : www.lsl.lk

கணக்காய்வாளர்கள்

SJMS அசோசியேட்ஸ் (Deloitte Touche Tohmatsu இன் சுயாதீன நிருபர் நிறுவனம்) பட்டயக் கணக்காளர்கள், இல. 11, காஸல் வீதி, கொழும்பு 04

சட்டத்தரணி

ஜூலியஸ் அண்ட் க்ரீசி வழக்கறிஞர், சொலிசிட்டர்ஸ் மற்றும் நொத்தாரிசு பொது இல. 41, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01

முதன்மை வங்கியாளர்

இலங்கை வங்கி

Finance Business License

Finance Business License issued by CBSL

View

Awards